Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை, தென்காசியில் பரவலாக மழை... குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்!

நெல்லை, தென்காசியில் பரவலாக மழை... குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்!

By: Monisha Mon, 16 Nov 2020 3:38:57 PM

நெல்லை, தென்காசியில் பரவலாக மழை... குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநகர பகுதிகளான பாளை, வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், சந்திப்பு, டவுன், பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

அணை பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையில் நேற்று 100 அடி நீர் இருப்பு இருந்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 101.50 அடியானது. பாபநாசம் அணையில் இருந்து 2071.88 கனஅடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. பிசான பருவ சாகுபடிக்காக அணையில் இருந்து 1404.75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

nellai,tenkasi,rain,courtallam,waterfall ,நெல்லை,தென்காசி,மழை,குற்றாலம்,அருவி

தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. கொரோனா தடை காரணமாக அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் தூரத்தில் நின்று ரசித்து விட்டு செல்கின்றனர்.

Tags :
|
|