Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமான இருக்கையின் அடியில் வனவிலங்கு பற்கள்; வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

விமான இருக்கையின் அடியில் வனவிலங்கு பற்கள்; வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

By: Monisha Mon, 21 Dec 2020 11:12:04 AM

விமான இருக்கையின் அடியில் வனவிலங்கு பற்கள்; வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

துபாயில் இருந்து சிறப்பு விமானம் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு அந்த விமானம் மீண்டும் துபாய் புறப்பட தயாரானது. முன்னதாக விமான நிலைய ஊழியா்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு சிறிய பாா்சல் கேட்பாரற்று கிடப்பதை கண்டுபிடித்தனா்.

இதுபற்றி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பாா்சலை பரிசோதித்தனா். அந்த பார்சலை பிரித்து பாா்த்தபோது, அதில் மூன்று பற்கள் இருந்தன. இது பற்றி வனத்துறைக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவற்றை ஆய்வு செய்தனர்.

flight,passengers,parcel,forestry,investigation ,விமானம்,பயணிகள்,பாா்சல்,வனத்துறை,விசாரணை

அந்த பற்களை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவை பெரிய பூனை வகையின் பற்கள் போல் உள்ளது என்றனர். மேலும் அவை சிறுத்தை, புலி போன்றவற்றின் பற்களாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் அவற்றின் நகங்கள், எலும்பு துண்டுகள் அடங்கிய துகள்களும் இருந்தன. பற்கள் மற்றும் நகம், எலும்பு துகள்களை ஆகியவை வனவிலங்குகள் ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சிறுத்தை, புலி போன்ற விலங்குகளின் நகம், பல் ஆகியவற்றை சங்கிலியில் டாலர்போல் சேர்த்து அணிந்து கொண்டால் அதிா்ஷ்டம் உண்டாகும் என்ற நம்பிக்கை ஒரு சிலரிடம் உள்ளது. அப்படிபட்டவா்கள் பல லட்சம் ரூபாய் கொடுத்து இவைகளை வாங்குவாா்கள். அவர்களுக்காக இவை விமானத்தில் கடத்தி வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|
|