Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா எங்கு, எப்படி மனிதர்களுக்கு பரவியது என்பதை அறிய வுகான் செல்லும் உலக சுகாதார விஞ்ஞானிகள்

கொரோனா எங்கு, எப்படி மனிதர்களுக்கு பரவியது என்பதை அறிய வுகான் செல்லும் உலக சுகாதார விஞ்ஞானிகள்

By: Karunakaran Thu, 17 Dec 2020 08:32:17 AM

கொரோனா எங்கு, எப்படி மனிதர்களுக்கு பரவியது என்பதை அறிய வுகான் செல்லும் உலக சுகாதார விஞ்ஞானிகள்

சீனாவின் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 7 கோடியே 43 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தொடக்கத்தில் வௌவ்வாலில் இருந்து கொரோனா பரவியதாக கருத்துக்கள் நிலவின. வொவ்வாலை உண்ணும் ஒருவகை பாம்பை சீன மக்கள் உணவாக உட்கொண்டு வந்தனர். இதனால், கொரோனா வைரஸ் வௌவ்வாலில் இருந்து பாம்பிற்கு பரவி பின்னர் பாம்பில் இருந்து மக்களுக்கு பரவியதாக கருத்துக்கள் நிலவி வருகிறது. அதேவேளை கொரோனா வைரஸ் வுகான் நகரில் உள்ள ஆய்வகக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சுமத்தி வருகின்றன.

world health scientists,travel,wukan,corona virus ,உலக சுகாதார விஞ்ஞானிகள், பயணம், வுகான், கொரோனா வைரஸ்

இதனால், வைரஸ் எப்படி உருவானது, இயற்கையாக உருவானதா? அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? அது மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்தது. இது குறித்து உலக நாடுகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால், விவகாரம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது. ஏற்கனவே, உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழுவினர் வுகான் நகருக்கு சென்று கொரோனாவின் உருவாக்கம் குறித்த ஆராய்சியை மேற்கொள்ள சீனா அனுமதி கொடுக்க மறுத்து வந்தது.

அதன்பின், தங்கள் விஞ்ஞானிகளை வுகான் நகரில் கொரோனா ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதிக்கம்படி சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கும் பின்னர் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு வுகான் நகருக்கு பயணம் மேற்கொண்டு சீனா அனுமதியளித்தது. சீனாவின் அனுமதியையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழுவினர் வுகான் நகருக்கு செல்ல உள்ளனர். இந்த ஆய்வு கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு உண்மைகளை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தும் என கருத்துக்கள் பரவி வருகிறது.

Tags :
|
|