Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவை முதலிடத்தில் வைக்கும் ஜனாதிபதியை நீங்கள் பெறுவீர்கள் - டிரம்ப்

அமெரிக்காவை முதலிடத்தில் வைக்கும் ஜனாதிபதியை நீங்கள் பெறுவீர்கள் - டிரம்ப்

By: Karunakaran Wed, 23 Sept 2020 3:13:56 PM

அமெரிக்காவை முதலிடத்தில் வைக்கும் ஜனாதிபதியை நீங்கள் பெறுவீர்கள் - டிரம்ப்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களமிறக்கப்பட்டு உள்ளார். கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஜனாதிபதி டிரம்பும், ஜோ பைடனும் ஒவ்வொரு மாகாணமாக சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஓகியோ மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஜனாதிபதி டிரம்ப், நவம்பர் 3-ந் தேதி அமெரிக்கர்கள் நமது தேசத்தை செழிப்பின் புதிய உயரங்களுக்கு உயர்த்துவதா அல்லது ஜோ பைடனிடம் ஆட்சியை ஒப்படைத்து நமது பொருளாதாரத்தை மூழ்கடிப்பதா என்பதை தீர்மானிப்பார்கள். எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஜோ பைடன் வெற்றி பெற்றால், அது சீனா வெற்றி பெற்றதாகும். நாம் வென்றால் ஓகியோ வெற்றிபெறுகிறது. அமெரிக்காவை முதலிடத்தில் வைக்கும் ஜனாதிபதியை நீங்கள் பெறுவீர்கள். நான் அமெரிக்காவை முதலிடத்தில் வைப்பேன் என்று கூறினார்.

president,america,trump,joe biden ,ஜனாதிபதி, அமெரிக்கா, டிரம்ப், ஜோ பிடென்

மேலும் அதிபர் டிரம்ப், ஜோ பைடன் தனது 47 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அமெரிக்க பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் செயல்பட்டு உள்ளார். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனா மற்றும் பிற நாடுகளுக்கு அவர் தாரைவார்த்துள்ளார். அமெரிக்க தொழிலாளர்களுடன் கை குலுக்கிவிட்டு அவர்களின் முதுகில் குத்தி உள்ளார் என்று கூறினார்.

இந்நிலையில் விஸ்கான்சின் மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜோ பைடன், டிரம்ப் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்ட எந்த ஒரு பிரச்சினையிலும் முழுமையான வெற்றி கண்டதில்லை. கொரோனா நெருக்கடியை சமாளிக்க சிறந்த தலைமை பண்பு வேண்டும். டிரம்ப் அதற்கு தயாராக இல்லை. அவர் உறைந்தார். செயல்பட தவறிவிட்டார். பீதி அடைந்தார் என்று தெரிவித்தார்.

Tags :
|