Advertisement

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மொறு மொறு பிரெஞ்சு ப்ரைஸ்!

By: Sonia Tue, 01 Dec 2020 4:39 PM

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மொறு மொறு பிரெஞ்சு ப்ரைஸ்!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரெஞ்சு ப்ரைஸ் அருமையான சுவையில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2 (பெரியது)
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை
முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். அப்படி வெட்டும் போது உருளைக்கிழங்கு மிகவும் தடிமனாகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ இருக்காமல் பார்த்து வெட்டுங்கள்.

kids,potatoes,french fries,taste,crisp ,குழந்தைகள்,உருளைக்கிழங்கு,பிரெஞ்சு ப்ரைஸ்,சுவை,மொறுமொறு

பின் வெட்டிய உருளைக்கிழங்கை நீரில் ஒருமுறை அலசி விட்டு, குளிர்ந்த நீரில் 10-15 நிமிடம் ஊறவையுங்கள். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு சூடானதும், நெருப்பைக் குறைத்துவிட்டு, முதலில் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை டிஷ்யூ பேப்பரின் மேல் வைத்து, குளிர வைக்கவும். பின் அதன் மேல் உப்பு தூவி ஒருமுறை பிரட்டி விட்டால், சுவையான பிரெஞ்சு ப்ரைஸ் தயார். இதை தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

Tags :
|
|