Advertisement

சுடச் சுட நெத்திலி கருவாடு வறுவல்!

By: Monisha Sat, 31 Oct 2020 8:11:27 PM

சுடச் சுட நெத்திலி கருவாடு வறுவல்!

நெத்திலி கருவாடை பயன்படுத்தி பலவகையான உணவுகளை சமைக்கலாம். இந்த பதிவில் நெத்திலி கருவாடு வறுவல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு – 100 கிராம்
தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு

செய்முறை
முதலாவது நெத்திலி கருவாடை வெந்நீரில் 5நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வையுங்கள்.நன்கு ஊறிய பின்னர் அதில் இருக்கும் மண், தேவையற்ற உறுப்புகள், அதன் தலை ஆகியவற்றை நீக்கிவிடுங்கள். அதன்பின் மண் இல்லாமல் சுத்தமாக கழுவங்கள். கழுவிய பிறகு அந்த கருவாட்டில் மிளகாய் தூள் , மஞ்சள், உப்பு சேர்த்து நன்கு தடவி அந்த கருவாட்டில் தடவி கொள்ளுங்கள்.

இப்படி தடவி 5நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். பின் கருவாட்டை வறுக்க உதவும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காயந்ததும் கருவாடை போட்டு விடுங்கள். அதன்பின் 5நிமிடங்கள் கழித்து பிரட்டி கொடுங்கள். இப்படி கருவாடு நன்கு வெந்து மொறு மொறுவென ஆகும் வரை வேக விடுங்கள். சுடச் சுட கருவாடு வறுவல் ரெடி!

Tags :
|