Advertisement

மாலை நேரத்தில் குழந்தைகள் ருசித்து சாப்பிட பேபி கார்ன் காளான் சூப்

By: Nagaraj Mon, 21 Sept 2020 09:58:04 AM

மாலை நேரத்தில் குழந்தைகள் ருசித்து சாப்பிட பேபி கார்ன் காளான் சூப்

மாலை நேரத்தில் குழந்தைகள் ருசித்து சாப்பிட பேபி கார்ன் காளான் சூப் வைத்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் – 1 கப்
தண்ணீர் – 4 கப்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
முட்டைக்கோஸ் – சிறிதளவு
காளான் – 10
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
சோள மாவு கரைசல் – 4 மேஜைக்கரண்டி
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – சுவைக்க

baby corn,ginger,garlic,green chillies,coriander ,பேபி கார்ன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி

செய்முறை: பேபி கார்னை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும். காளானை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். அடுத்து அத்துடன் பேபி கார்ன் மற்றும் காளான், உப்பு மற்றும் மிளகு சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கலந்து கொள்ளவும்.

அதில் சோயா சாஸ், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். சோள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் சேர்க்கவும். இந்த கலவை கெட்டியாக வரும்வரை கிளறி பின் அதில் கொத்தமல்லி இலை, முட்டைக்கோஸ் சேர்க்கவும். சுவையான பேபிகார்ன் காளான் சூப் ரெடி.

Tags :
|
|