Advertisement

ரசித்து, ருசித்து சாப்பிட வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்!!!

By: Nagaraj Wed, 07 Oct 2020 7:44:34 PM

ரசித்து, ருசித்து சாப்பிட வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்!!!

வாழைக்காயில் பொரியல், அவியல், ஃப்ரை, வறுவல் என பல வகை சாப்பிட்டு இருப்போம். இப்போது வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

வாழைக்காய் - 1
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/2 துண்டு
பூண்டு - 5 பல்
மிளகு - 2-3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

banana,turmeric powder,chilli powder,mustard,eggplant powder ,வாழைக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, பெருங்காயத்தூள்

செய்முறை: வாழைக்காயின் தோலை நீக்கி அதனை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வாழைக்காயைப் போட்டு அரை வேக்காடாக வேகவைக்கவும்.
அடுத்து வாழைக்காயை எடுத்து அதனுடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அரைக்க வைத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைக்கவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுத்து அதனுடன் வாழைக்காயைப் போட்டு பிரட்டி, அரைத்த பேஸ்ட் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால் வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் ரெடி. இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|