Advertisement

ருசியோ ருசி என்று சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும் வாழைக்காய் மிளகு பொடிமாஸ்

By: Nagaraj Tue, 01 Sept 2020 08:41:24 AM

ருசியோ ருசி என்று சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும் வாழைக்காய் மிளகு பொடிமாஸ்

வாழைக்காய் மிளகு பொடிமாஸ் ருசி சூப்பராக இருக்கும். இதை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 1
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - 1 கொத்து
மிளகுத் தூள் -1ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
உளுந்து -1/2ஸ்பூன்
தேங்காய்த்துருவல் -5ஸ்பூன்
எண்ணெய் -2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை-சிறிதளவு

bananas,green chillies,onions,peppers,mustard,peas ,வாழைக்காய், பச்சை மிளகாய், வெங்காயம், மிளகு, கடுகு, உளுந்து

செய்முறை: வாழைக்காயை இரண்டாக, அல்லது மூன்றாக, கட் பண்ணி,தண்ணீரில் வேக வைக்கவும்(அரை வேக்காடாக). வேகவைத்த வாழைக்காயை தோலை நீக்கி விட்டு துருவி கொள்ளவும். அரை வேக்காடாக இருந்தால்தான் துருவ வரும். ஒரு கடாயில், 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து போட்டு தாளித்து பிறகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் துருவிய வாழைக்காயை அதில் சேர்த்து வதக்கவும், அதனுடன் 1 ஸ்பூன் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிண்டி இறக்கவும் .கடைசியாக கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளலாம். வாழைக்காய் மிளகு பொடிமாஸ் தயார். ருசி அருமையாக இருக்கும்.

Tags :
|