Advertisement

வாழைத் தண்டு சூப் எப்படி செய்வது?

By: Monisha Tue, 13 Oct 2020 4:10:43 PM

வாழைத் தண்டு சூப் எப்படி செய்வது?

வாழைத் தண்டு பொதுவாக சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக உள்ளது. இந்த வாழைத் தண்டு சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
வாழைத் தண்டு - ஒரு துண்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு

செய்முறை
வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியை முதலில் நன்றாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை வடிகட்டவும்.

வடிகட்டியதை 10 நிமிடம் மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் அதனுடன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் கலந்து இறக்கி பரிமாறலாம்.

Tags :
|