Advertisement

அசத்தல் சுவையில் கருணைக்கிழங்கு கபாப் செய்முறை

By: Nagaraj Thu, 27 Aug 2020 08:13:01 AM

அசத்தல் சுவையில் கருணைக்கிழங்கு கபாப் செய்முறை

உருளைக் கிழங்கு, மட்டன், சிக்கன் என பலவகையான கபாப் வகைகளை சாப்பிட்டு இருப்பீர்கள். அந்தவகையில் இப்போது கருணைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கருணைக்கிழங்கு – 1/4 கிலோ
மிளகாய் தூள்- தேவையான அளவு,
மிளகுத் தூள் – தேவையான அளவு,
இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு
பிரட் தூள் - தேவையான அளவு
தனியா தூள்- தேவையான அளவு
கரம் மசாலா - தேவையான அளவு,
புளி- தேவையான அளவு
புதினா - தேவையான அளவு
மைதா- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

beetroot,chilli powder,pepper powder,ginger,garlic paste ,
கருணைக்கிழங்கு, மிளகாய் தூள், மிளகுத் தூள், இஞ்சி, பூண்டு விழுது

செய்முறை: கருணைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும், அடுத்து கருணைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கிளறவும். அடுத்து மிளகாய்த் தூள், மிளகுத் தூள், தனியா தூள், கரம் மசாலா, புதினா, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி இறக்கி கருணைக்கிழங்கை போட்டு பிசையவும்.

அடுத்து பின்னர் உருண்டைகளாக பிடித்து மைதா மற்றும் பிரெட் தூளில் நனைத்து எண்ணெயில் பொரித்தால் கருணைக் கிழங்கு கபாப் ரெடி.

Tags :
|