Advertisement

ஆரோக்கியம் நிறைந்த சுவையான கோதுமை சுண்டல் செய்து பாருங்கள்!

By: Nagaraj Thu, 24 Dec 2020 11:23:49 PM

ஆரோக்கியம் நிறைந்த சுவையான கோதுமை சுண்டல் செய்து பாருங்கள்!

சத்தான கோதுமை சுண்டலை மிக சுவையாக செய்வது கொடுத்து உங்கள் குடும்ப உறுப்பினர்களை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

முளைகட்டிய கோதுமை - 2 கப்
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பில்லை -சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1 கப்

wheat grits,tomatoes,onions,green chillies ,கோதுமை சுண்டல், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய்

செய்முறை: முதலில் முளைகட்டிய கோதுமையை வேகவைத்து எடுத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாகிய பிறகு அதில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை போட்டு கிளறிவிட்டு அதில் வேகவைத்த முளைகட்டிய கோதுமை மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டும், கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் கோதுமை சுண்டல் தயார்.

Tags :
|