Advertisement

சப்பு கொட்டி சாப்பிட தூண்டும் செட்டிநாடு மிளகு கோழி வறுவல்

By: Nagaraj Fri, 11 Sept 2020 09:06:56 AM

சப்பு கொட்டி சாப்பிட தூண்டும் செட்டிநாடு மிளகு கோழி வறுவல்

செட்டிநாட்டு உணவுகள் என்றாலே பலரும் ருசித்துப் பார்க்க ஆர்வம் காட்டுவர், அதிலும் அசைவ உணவுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். இதில் செட்டிநாடு மிளகு கோழி வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை

சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 3
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -1
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

chicken,large onion,tomato,chilli powder,coriander powder ,
சிக்கன், பெரிய வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மல்லித்தூள்

செய்முறை: முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, ஊற வைக்கவும்.

வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் மல்லித் தூள் சேர்க்கவும், தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி உப்பு சேர்த்து, சிக்கனை வேக வைக்கவும்.
அடுத்து, அதில் மிளகுத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.
கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். அருமையான சுவையில் செட்டிநாடு மிளகு கோழி வறுவல் ரெடி.

Tags :
|