Advertisement

அருமையான சுவையில் பருப்பு மசாலா கிரேவி செய்து பாருங்கள்!!!

By: Nagaraj Wed, 06 May 2020 6:20:05 PM

அருமையான சுவையில் பருப்பு மசாலா கிரேவி செய்து பாருங்கள்!!!

சென்னை: சமையல் என்பது கலை... அதிலும் சுவையான சமையல்ன்னா... ஒரு கை பார்த்திடுவோம். அந்த வகையில் சுவையான பருப்பு மசாலா கிரேவி செய்முறை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1, தக்காளி - 2, துவரம் பருப்பு - 1/4 கப், பாசிப் பருப்பு - 1/4 கப், மைசூர் பருப்பு - 1/2 கப், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், சிவப்பு மிளகாய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2 அல்லது காய்ந்த மிளகாய், இஞ்சி - 1 ஸ்பூன், பூண்டு-4 பல், சிகப்பு மிளகாய் தூள் - தேவையான அளவு, கஸ்தூரி மேத்தி - சிறிதளவு, கரம் மசாலா - அரை டீஸ்பூன்,கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை- சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன்,எண்ணெய், உப்பு தேவையான அளவு.

seasoning spices,gravy,musk,mashed potatoes.

செய்முறை: முதலில், துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து சுமார் 5 விசில்விட்டு வேகவிடவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் எண்ணெய்விட்டு சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

seasoning spices,gravy,musk,mashed potatoes.

கூடவே, சிகப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கஸ்தூரி மேத்தி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர், மசித்து வைத்த பருப்பு, ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து சுமார் 15 நிமிடங்களுக்கு வேகவிடவும். கடைசியாக கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் மணமும், சுவையும் அப்படியே மனதை அள்ளும், சுவையான பருப்பு மசாலா கிரேவி தயார்... தயார்!!!

Tags :
|
|