Advertisement

சோளத்தை சுண்டல் செய்து சாப்பிடுவது எப்படி?

By: Monisha Thu, 01 Oct 2020 4:14:11 PM

சோளத்தை  சுண்டல் செய்து சாப்பிடுவது எப்படி?

கோதுமை,அரிசியை விட சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகம் நிறைந்துள்ளது. சோளத்தில் கரோடெனாய்டுகள், வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-இ உள்ளது. இன்று நாம் சத்து நிறைந்த சோளத்தை சுண்டல் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சோளம் - 2 கப் (உதிர்த்தது)
வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
எலுமிச்சம்பழம் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - 2 கீற்று
உப்பு - தேவைக்கேற்ப

corn,vitamin,antioxidant,onion,coconut ,சோளம்,வைட்டமின்,ஆன்டி ஆக்ஸிடென்ட்,வெங்காயம்,தேங்காய்

செய்முறை
சோளத்தை உதிர்த்து உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த சோளத்தை போட்டு கிண்டி விடவும். இறக்கும் முன்பு தேங்காய்த்துருவலையும், எலுமிச்சைச்சாறும் சேர்த்து இறக்கவும். அருமையான சோளம் சுண்டல் தயார்.

Tags :
|
|