Advertisement

அஜீரண தொல்லையை நீக்கும் சீரகம் - தனியா சூப் செய்முறை

By: Nagaraj Sat, 28 Nov 2020 08:48:04 AM

அஜீரண தொல்லையை நீக்கும் சீரகம் - தனியா சூப் செய்முறை

பலரும் அஜீரணத் தொல்லையால் தவிப்பார்கள். அப்போது கண்ட கண்ட மருந்தையும் சாப்பிட்டு மேலும் உடல்நலத்தை கெடுத்துக் கொள்வார்கள். இதைவிட இயற்கையான வழிமுறையில் சீரகம்-தனியா சூப் செய்து சாப்பிடுங்கள். அருமையான பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள் :


சீரகம், மல்லி (தனியா) - தலா கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு,
மிளகு - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைப் பழம் - 2,
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.

cumin,pepper,ginger,soup,indigestion ,
தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, சூப், அஜீரணத் தொல்லை

செய்முறை: மல்லி (தனியா), சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும். இத்துடன், கறிவேப்பிலை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும்.

இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, சக்கையை வடிகட்டி எடுத்துவிடவும். பிறகு, தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும். இந்த சூப் அஜீரணத் தொல்லையை போக்கும்.

Tags :
|
|
|
|