Advertisement

எளிய முறையில் கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ்க்ரீம் செய்யலாம் வாங்க!

By: Monisha Thu, 25 June 2020 5:20:01 PM

எளிய முறையில் கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ்க்ரீம் செய்யலாம் வாங்க!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு புது விதமாக கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ்க்ரீமை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம்.

என்னென்ன தேவை?
கஸ்டார்ட் ஆப்பிள் – 8 முதல் 10
மேரி பிஸ்கட் – 7 முதல் 8
பால் – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்

எப்படி செய்வது?
நல்ல பழுத்த கஸ்டார்ட் ஆப்பிள் எடுத்து இரண்டாக வெட்டி விதைகளை நீக்கவும். சதையை கரண்டியால் நீக்கி ஜாரில் போட்டு அதனுடன் சர்க்கரை, மேரி பிஸ்கட், பால் சேர்த்து நன்றாக மசிக்கவும். ஒரு கன்டெய்னரில் அதை ஊற்றி பிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். பின்னர் அவற்றை எடுத்து மீண்டும் ஜாரில் போட்டு நன்றாக மசித்து கன்டெய்னரில் ஊற்றி மேலும் 1 மணி நேரம் பிரிஜ்ஜில் வைத்து பரிமாறவும்.

Tags :
|