Advertisement

சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த ப்ரோக்கோலி பக்கோடா செய்முறை

By: Nagaraj Sat, 17 Oct 2020 6:03:01 PM

சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த ப்ரோக்கோலி பக்கோடா செய்முறை

ப்ராக்கோலியில் உள்ள அதிக அளவு கால்சியம் பற்கள் மற்றும் எலும்பினை வலுவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த ப்ரோக்கோலியில் சுவை மிக்க பக்கோடா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

ப்ரோக்கோலி - 1
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு- 1 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி -1 ஸ்பூன்
சமையல் சோடா -14 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

broccoli,baguette,chili powder,apricots ,ப்ரோக்கோலி, பக்கோடா, மிளகாய் தூள், பெருங்காயம்

செய்முறை: ப்ரோக்கோலியினை சிறிது சிறுதாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து இதனை உப்பு சேர்த்து சூடான நீரில் ஊறவிட்டு அலசவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, சமையல் சோடா, பெருங்காயம், தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பூவினை மாவில் போட்டு எடுத்து பொரித்தால் ப்ரோக்கோலி பக்கோடா ரெடி.

Tags :