Advertisement

சுவையான ருசி மிகுந்த தேங்காய்ப்பால் பாயாசம் செய்முறை

By: Nagaraj Wed, 21 Oct 2020 8:43:32 PM

சுவையான ருசி மிகுந்த தேங்காய்ப்பால் பாயாசம் செய்முறை

தேங்காய்ப் பால் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது, மேலும் இது உடல் எடையினை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளதால் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இப்போது தேங்காய்பால் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

தேங்காய் - 1
பச்சரிசி - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு ஸ்பூன்
வெல்லம் – 1/4 கிலோ
காய்ந்த திராட்சை - 10 கிராம்
முந்திரி - 10 கிராம்

ipl coconut milk,grapes,cashews,vellamchennai team bravo withdrawal from the competition ,தேங்காய்ப்பால், திராட்சை, முந்திரி, வெல்லம்

செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். அடுத்து தேங்காயில் தண்ணீர் சேர்த்து குறைந்தது 4 முறை பால் எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய்ப்பாலை பாத்திரத்தில் ஊற்றி அரிசியைப் போட்டு வேகவிடவும். அதனுடன் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து அரிசியுடன் கலந்து முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி சேர்த்து இறக்கினால் தேங்காய்ப் பால் பாயாசம் ரெடி.

Tags :
|