Advertisement

சுவை மிகுந்த கடலை மாவு வெந்தய கீரை பரோட்டா செய்முறை

By: Nagaraj Sat, 05 Dec 2020 2:34:43 PM

சுவை மிகுந்த கடலை மாவு வெந்தய கீரை பரோட்டா செய்முறை

கடலைமாவில் ருசியான பரோட்டா செய்து பாருங்கள்... மைதாவில் செய்த பரோட்டா உடல் நலத்திற்கு தீங்கானது. இதனால் எந்த தீங்கும் ஏற்படுத்தாத கடலை மாவில் எப்படி பரோட்டா செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு -1 கப்
கோதுமை மாவு - அரை கப்
மஞ்சள் தூள்- தேவையான அளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தய கீரை - 1 தேக்கரண்டி
சீரக விதைகள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு

peanut flour,wheat flour,coconut chutney,blonde ,கடலை மாவு, கோதுமை மாவு, தேங்காய் சட்னி, பொன்னிறம்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் கடலை மாவு, தேவையான அளவு பெருங்காயம், உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் போன்ற எல்லா பொருள்களையும் சேர்த்து சாப்பத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிசைந்த கோதுமை மாவினை உருண்டைகளாக திரட்டி, ரொட்டி போல் தட்டையாக தேய்த்து கொள்ள வேண்டும். பிறகு பரோட்டாவை சூடான தவாவில் போட்டு இரண்டு பக்கங்களும் பொன்னிறம் ஆகும் வரை வேக வைக்க வேண்டும். பின் சூடான பரோட்டாவிற்கு மிகவும் பொருத்தமான தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.

Tags :