Advertisement

அருமையான சுவையில் வாழைப்பழ கட்லெட் செய்முறை

By: Nagaraj Sat, 07 Nov 2020 10:53:22 PM

அருமையான சுவையில் வாழைப்பழ கட்லெட் செய்முறை

வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து வாழைப்பழ கட்லெட் ஈசியாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிவப்பு அவல் - 1/2 கப்
வேர்க்கடலை - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
வாழைப்பழம் - 2

banana cutlets,cardamom powder,sugar,mix ,வாழைப்பழ கட்லெட், ஏலக்காய் தூள், சர்க்கரை, கலவை

செய்முறை: முதலில், 2 வாழைப்பழத்தை எடுத்து இட்லி தட்டில் வேக வைக்கவும். சிவப்பு அவலை வறுத்து தண்ணீரில் ஊறவைத்து, பின் தண்ணிரை வடித்து எடுத்து வைக்கவும்.

பின்பு வேர்க்கடலையை பாத்திரத்தில் வறுத்து , அதனை அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி சேர்த்து, அதனுடன் வேர்க்கடலை, ஊற வைத்த அவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதனை தொடர்ந்து, கலவையை வேண்டிய வடிவில் பிடித்து வைக்கவும். பின் தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கலவையை போட்டு ஒரு புறம் சிவக்க வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். இப்போது சுவையான மற்றும் சத்தான வாழைப்பழ கட்லெட் ரெடி.

Tags :
|