Advertisement

அருமையான ருசியில் மீன் புலாவ் செய்முறை

By: Nagaraj Thu, 01 Oct 2020 09:41:05 AM

அருமையான ருசியில் மீன் புலாவ் செய்முறை

அசைவ உணவு பிரியர்களுக்கு மீன் என்றால் அதீத விருப்பம். பல்வேறு வகையிலும் மீன் சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வகையில் மீன் புலாவ் செய்து பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ரொம்பவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு.

தேவையானவை:

புலா‌வ் அரிசி - ½ கிலோ
மீன் - கால் கிலோ
வெங்காயம் - 4
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள்,
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - ½ ஸ்பூன்
சோம்பு- 1 ஸ்பூன்,
சீரகம் -1 ஸ்பூன்
எலுமி‌ச்சை - 1
கொத்தமல்லி இலை - 1 சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு

fish slices,lemon juice,chili,coriander ,மீன் துண்டுகள், எலுமிச்சம்சாறு, மிளகாய்த்தூள், கொத்தமல்லி

செய்முறை: அரிசியை ஊற வைக்கவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வாண‌லி‌யி‌ல் எண்ணெய் ஊற்றி மல்லித்தூள், சோம்பு, ‌சீரகத்தூள் போட்டு வதக்கவும்.

அதில் எலுமிச்சப்பழம் சாற்றை ஊற்றி மீன் துண்டுகளைப் போட்டு வேகவிட்டு ‌மீ‌ன்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து அதில் அரிசி, உ‌ப்பு, ‌மிளகா‌ய்த் தூள், கொத்தமல்லி இலை மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு மேலாக மீனை வைத்து தம் போட்டு இறக்கினால் மீன் புலாவ் ரெடி.

Tags :
|