Advertisement

அருமையான சுவையில் தேங்காய்ப்பால் புலாவ் செய்முறை

By: Nagaraj Tue, 15 Dec 2020 11:13:18 PM

அருமையான சுவையில் தேங்காய்ப்பால் புலாவ் செய்முறை

தேங்காய்ப் பாலில் அதிக அளவிலான கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது. இதனைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் உண்ணுதல் வேண்டும், இந்த தேங்காய் பாலில் இப்போது புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

பாசுமதி அரிசி - 1 கப்
தேங்காய் பால் - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய்- 2
பட்டை – சிறிதளவு

basmati rice,coconut milk,onion,tomato,ginger paste ,பாசுமதி அரிசி, தேங்காய் பால், வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு பேஸ்ட்

செய்முறை: பாசுமதி அரிசியை தண்ணீரில் நன்கு ஊறவைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

குக்கரில் வெண்ணெய் போட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை போட்டு தாளிக்கவும். அடுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அரிசி போட்டு, உப்பு, தேங்காய் பால் இரண்டு கப் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கும்போது கொத்தமல்லித் தழை தூவினால் தேங்காய் பால் புலாவ் ரெடி. சூப்பர் ருசி என்று குடும்பத்தினர் பாராட்டுவார்கள்.

Tags :
|
|