Advertisement

குழந்தைகள் ருசித்து சாப்பிட திரட்டுப்பால் செய்து கொடுங்கள்

By: Nagaraj Wed, 04 Nov 2020 10:54:07 PM

குழந்தைகள் ருசித்து சாப்பிட திரட்டுப்பால் செய்து கொடுங்கள்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் திரட்டுப்பாலை வீட்டிலேயே அருமையான முறையில் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :


வெண்ணெய் நிறைந்த பால் - 1 லிட்டர்
நெய் - 10௦ கிராம்
சர்க்கரை - 200 கிராம்
ஏலப்பொடி - சிறிதளவு

butter,ghee,sugar,cardamom,almonds ,வெண்ணெய், நெய், சர்க்கரை, ஏலப்பொடி, பாதாம் பருப்பு

செய்முறை: முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடும்போது அடுப்பை மிதமான தீயில் எரிய வைத்து கரண்டியால் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

பின்பு கொதிக்கின்ற பாலானது திக்காக நிறைய ஏடு சேர்ந்து கெட்டியாக திரைந்து, வரும்பொது, அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கி கொண்டே இருந்தால் பால் திரண்டு ஒன்றாக சேர்ந்து வரும்

அதனுடன் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறி ஒரு கிண்ணத்தில் நெய்யை தடவி அதில் திரண்ட பாலை சேர்த்து, முந்திரி பருப்பு அல்லது பாதாம் பருப்பு தூவி பரிமாறினால் சுவையான திரட்டுப்பால் ரெடி.

Tags :
|
|
|