Advertisement

ஆரோக்கியம் நிறைந்த வெந்தய குழம்பு!

By: Monisha Sun, 20 Dec 2020 5:46:29 PM

ஆரோக்கியம் நிறைந்த வெந்தய குழம்பு!

வெந்தயம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. இந்த பதிவில் ஆரோக்கியம் நிறைந்த வெந்தய குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
சுண்டைக்காய் வற்றல் - 3 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 15,
தனியா - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8,
வெந்தயம் - 3 டீஸ்பூன்,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
தக்காளி - 1,
நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
வெல்லம் - சிறிது,
கறிவேப்பிலை - ஒரு கொத்து.

health,fenugreek,small onions,tomatoes,tamarind ,ஆரோக்கியம்,வெந்தயம்,சின்ன வெங்காயம்,தக்காளி,புளி

செய்முறை
கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். மீதியுள்ள நல்லெண்ணெயை கடாயில் ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

இத்துடன் சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாகக் குழைய வதக்கவும். அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும். ஆரோக்கியம் நிறைந்த வெந்தய குழம்பு தயார்!

Tags :
|