Advertisement

ஆரோக்கியம் நிறைந்த அத்திப் பழ அல்வா செய்முறை

By: Nagaraj Sun, 13 Sept 2020 11:21:40 AM

ஆரோக்கியம் நிறைந்த அத்திப் பழ அல்வா செய்முறை

அத்திப்பழத்தில் உடல் நலத்திற்கு தேவையான ஏராளமாக சத்துக்கள் அடங்கி உள்ளது. இதில் அல்வா செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் அசந்து போய் விடுவார்கள்.

தேவையானவை:

அத்திப் பழ துண்டு-20,
முந்திரி-20,
பாதாம், பிஸ்தா-10,
சர்க்கரை-1 கப்,
நெய்-5 மேஜைக்கரண்டி,
ஏலப் பொடி-சிறிதளவு
தண்ணீர் –தேவையான அளவு.

figs,alva,ghee,sugar,cardamom ,அத்திப்பழம், அல்வா, நெய், சர்க்கரை, ஏலக்காய்

செய்முறை: முந்திரி, தோல் நீக்கிய பிஸ்தா,அத்திப் பழத் துண்டுகளை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். ஊறியபின் விழுதாக அரைக்கவும்.

கடாயில் நெய் ஊற்றி, அரைத்த விழுதைச் சேர்க்கவும். அந்தக் கலவையை 10 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். பின் அடுப்பை மெலிதாக எரியவிட்டு, சர்க்கரை சேர்க்கவும். ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி, அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

சுவையான சத்து மிக்க அத்திப்பழ அல்வா தயார். எக்காலத்துக்கும் ஏற்றது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|
|
|
|