Advertisement

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு கேழ்வரகு உருண்டை!

By: Monisha Fri, 04 Dec 2020 08:46:40 AM

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு கேழ்வரகு உருண்டை!

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். எனவே அவர்களுக்காக சத்து நிறைந்த கேழ்வரகு உருண்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை
கேழ்வரகு மாவு- ஒரு கப்
வெல்லம்- 1/2 கப்
முந்திரி -5
ஏலக்காய் -1
நெய் – கொஞ்சம்

ragi,jaggery,cashews,cardamom,ghee ,ராகி,வெல்லம்,முந்திரி,ஏலக்காய்,நெய்

செய்முறை
அடுப்பில் வானொலியை வைத்து நெய் விட்டுக் காய்ந்ததும் முந்திரியைப் போட்டு பொன் வறுவலாக வறுத்தெடுத்துக் கொண்டு, மீண்டும் அதே வானொலியில் கேழ்வரகு மாவைப்போட்டு நன்கு கிளறவும். தீ மிதமாக வைத்து கொண்டு விடாமல் கிளறிவிட்டுக் கொண்டேயிருக்கவும்.

மாவு நன்றாக சூடேறி வாசனை வந்ததும் இறக்கி வைக்கவும்.ஏலக்காயைப் பொடித்து வைக்கவும். வெல்லத்தைப் நன்கு பொடித்து அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் காய வைக்கவும். தீ அதிகமானால் வெல்லம் அடியில் பிடித்து தீய்ந்து போகும்.

வெல்லம் முழுவதும் கரைந்து நுரைத்துக்கொண்டு பொங்கிவரும்.அப்போது தீயை நிறுத்திவிட்டு மாவைக் கொட்டிக்கொண்டே விடாமல் கிளறவும். முந்திரி,ஏலக்கையை சேர்த்துக்கொள்ளவும். மாவு கை பொறுக்கும் சூடாக இருக்கும்போது வேண்டிய அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். நல்ல சுவையான கேழ்வரகு மாவு உருண்டைகள் ரெடி!

Tags :
|