Advertisement

அனைவரும் விரும்பும் வகையில் சப்பாத்தி மிருதுவான பதத்தில் வர சில யோசனைகள்

By: Nagaraj Mon, 14 Dec 2020 09:51:18 AM

அனைவரும் விரும்பும் வகையில் சப்பாத்தி மிருதுவான பதத்தில் வர சில யோசனைகள்

சப்பாத்தி மென்மையாக இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடத் தோன்றும். வீடுகளில் சப்பாத்தி செய்யும் போது, சுவையாகவும், மென்மையாகவும் இருக்க உங்களுக்காக சில ஆலோசனைகள்.

சப்பாத்தி என்றாலே சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவது. சப்பாத்தி மாவு பிசைவதற்கு முன்னால், கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

சப்பாத்தி உருட்டும் போது அதனை நான்காக மடித்து உருட்டினால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும். சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால், சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

chapati,tenderness,flavor,milk,a little oil ,சப்பாத்தி, மென்மை, சுவை, பால், சிறிதளவு எண்ணெய்

சப்பாத்தி மாவு பிசையும்போது சுடு தண்ணீர் ஊற்றிப் பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். சப்பாத்தி மாவு கலக்கும் போது பேக்கிங் சோடா அரை தேக்கரண்டி சேர்க்க வேண்டும்.
சப்பாத்தி மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மென்மையாகவும் உப்பியும் வரும்.

சூடான பால் சிறிதளவு சேர்த்து, மாவு பிசைந்தால் சப்பாத்தி மென்மையாக காணப்படும். இதை செய்து பாருங்கள். சப்பாத்தியின் மென்மையில் மனம் கிறங்கி விடும்.

Tags :
|
|