Advertisement

அருமையான சுவையில் வீட்டிலேயே மசாலா ஃப்ரை இட்லி செய்முறை

By: Nagaraj Thu, 06 Aug 2020 08:45:06 AM

அருமையான சுவையில் வீட்டிலேயே மசாலா ஃப்ரை இட்லி செய்முறை

மசாலா ஃப்ரை இட்லி செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய நிலையில் வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களும் வீட்டில்தானே இருக்கிறோம் பிறகு சாப்பிடலாம் என்று காலை உணவை சாப்பிடாமலேயே இருந்து விடுகிறார்கள். இது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அப்படிப்பட்டவர்களுக்கு எளிதாகச் செய்யக்கூடிய இந்த மசாலா ஃப்ரை இட்லி உதவும்.

செய்முறை: சிறிய குழி உள்ள இட்லி தட்டில் எண்ணெய் தடவவும். பின்னர் இட்லி மாவை ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து குழிகளில் ஊற்றி இட்லிகளாக வேகவைத்து எடுக்கவும்.

spicy fry idli,digestion,refreshment,breakfast ,மசாலா ஃப்ரை இட்லி, ஜீரணம், புத்துணர்ச்சி, காலை நேரம்

பின்னர் தலா ஒரு டீஸ்பூன் பூண்டு விழுது, இஞ்சி விழுது, இட்லி மிளகாய்ப்பொடி ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்து இட்லியில் நன்கு தடவவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி இந்த இட்லிகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்தெடுக்கவும். சூடாகச் சாப்பிட்டால் மொறுமொறுப்பாக ருசியுடன் இருக்கும்.

எளிதாக ஜீரணமாகக்கூடிய இட்லியில் இஞ்சி- பூண்டு விழுது சேர்க்கப்படுவதால் பசியைப் போக்கும். மதிய நேரத்துக்கான பசியுணர்வைத் தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

குறிப்பு: காலையில் சாப்பிட நேரமில்லாமல் எடுத்துவைத்த இட்லிகளையும் துண்டுகளாக்கி இதே முறையில் செய்து சாப்பிடலாம்.

Tags :