Advertisement

அட்டகாசமான மாலை நேர ஸ்னாக் செய்வது எப்படி?

By: Monisha Sat, 22 Aug 2020 5:39:57 PM

அட்டகாசமான மாலை நேர ஸ்னாக் செய்வது எப்படி?

சுலபமாக செய்யக் கூடிய அட்டகாசமான ஒரு மாலை நேர ஸ்னாக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சாஸ் செய்வதற்கு
சிவப்பு மிளகாய் உடைத்தது - 3 மேசைக்கரண்டி
பூண்டு - நறுக்கியது, 1 தேக்கரண்டி
கொத்தமல்லி வேர் - நறுக்கியது, 1 தேக்கரண்டி
புளிக்கரைசல் -2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
தக்காளி கெட்ச்சப் 2 மேசைக்கரண்டி
சர்க்கரை 100 கிராம்

மாவு தயாரிக்க
கடலை -50 கிராம்
சோள மாவு -20 கிராம்
அரிசி மாவு -20 கிராம்
மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1தேக்கரண்டி
கொத்தமல்லி தூள்- 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1தேக்கரண்டி
சுவைக்கேற்ப உப்பு

snack,sauce,chilli,rice flour,corn flour ,ஸ்னாக்,சாஸ்,மிளகாய்,அரிசி மாவு,சோள மாவு

உள்ளே நிரப்புவதற்கு
வேகவைத்த உருளைக்கிழங்கு - 3 பெரியது
கடுகு - 1தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1தேக்கரண்டி
கறி வேப்பிலை 5 &- 6
வெங்காயம்- 2 பெரியது, நறுக்கியது
தக்காளி 1 பெரியது, நறுக்கியது
இஞ்சி -1 தேக்கரண்டி, நறுக்கியது
பூண்டு- 1 தேக்கரண்டி, நறுக்கியது
பச்சை மிளகாய்- 1 தேக்கரண்டி, நறுக்கியது
மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
தனியா பொடி -1 தேக்கரண்டி
கரம் மசாலா -1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் -20 மிலி
சீஸ் -50 கிராம்

செய்முறை:
மிளகாயை நீளவாக்கில் இரண்டாக பிளந்து, விதைகளை எடுத்து, ஓரமாக வைக்கவும். ஈரமாவு தயாரிப்பதற்கான உலர்ந்த இடுபொருட்களை நன்றாக கலக்கவும். பிறகு அதனுடன் தண்ணீரைச் சேர்த்து, ஸ்பூனின் பின்புறத்தில் கோட்டிங் ஆக கூடிய பதத்திற்கு நன்றாக கலக்கி கொள்ளவும். வெஜிடபிள் ஆயிலை பேனில் சூடாக்கவும், அதில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

snack,sauce,chilli,rice flour,corn flour ,ஸ்னாக்,சாஸ்,மிளகாய்,அரிசி மாவு,சோள மாவு

பிறகு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையில் தக்காளியைச் சேர்த்து, நன்றாக கலக்கவும். பிறகு, எல்லா மசாலாக்களையும் இந்த கிரேவியில் கொட்டி, பச்சை வாசம் போகும் வரை சமைக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை, கைகளால் மசித்து, கலவையில் சேர்த்து, நன்றாக கலந்து விடவும். உப்பு காரம் சரிபார்த்து, குளிர விடவும். இந்தக் கலவையில் சீஸைச் சேர்த்து கலக்கவும்.

மிளகாயின் உட்பகுதியில், உருளைக் கிழங்கு கலவையை நிரப்பி, 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு, மிளகாயை கடலை மாவில் தோய்த்து, பான்கோ பிரட் துணுக்குகளில் பிரட்டி எடுக்கவும். சாஸிற்கு, ஒரு தேக்கரண்டி எண்ணெயையை சேர்த்து அதில் பூண்டைச் சேர்க்கவும். பிரவுன் நிறமாகும் வரை காத்திருக்காமல், மிளகாய், சர்க்கரை சேர்த்து, தண்ணீரைக் கொட்டி பாத்திரத்தில் உள்ள ஃப்ளேவர்களை சேர்க்கவும்.

சேர்க்கப்பட்ட சர்க்கரை திடமாகும் வரை காத்திருக்கவும். இந்த சாஸில், இப்போது, புளிக்கரைசல் மற்றும் தக்காளி கெட்ச்சப்பை, உப்பு சேர்த்து கலக்கவும். இந்தக் கலவை குளிர்வடையும் வரை காத்திருக்கவும். மெதுவாக சாஸ் பதத்திற்கு திக்காகும் வரை காத்திருக்கவும். தயார் செய்த மிளகாயை சூடான எண்ணெயில் நன்றாக பொருத்து, சட்னியுடன் பரிமாறவும்.

Tags :
|
|
|