Advertisement

அட்டகாசமான சுவையில் ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

By: Monisha Sun, 27 Dec 2020 4:53:15 PM

அட்டகாசமான சுவையில் ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

அசைவ பிரியர்களுக்காக அட்டகாசமான சுவையில் ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சீரகசம்பா அரிசி - 1 கப்
சிக்கன் - 250 கிராம்
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
எண்ணெய் - 5 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6
தயிர் - 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 (சாறு எடுத்து கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
புதினா இலை - தேவையான அளவு

ambur chicken biryani,ginger,garlic,tomato,onion ,ஆம்பூர் சிக்கன் பிரியாணி,இஞ்சி,பூண்டு,தக்காளி,வெங்காயம்

செய்முறை
கடாயில் எண்ணெய்யை சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு 10 நிமிடம் ஊறவைத்த மிளகாய் வற்றலை அரைத்து அத்துடன் சேர்த்து வதக்கவும். அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் சிக்கனை சேர்த்து வதக்கவும். அதோடு தயிர், புதினா கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு கலந்து தண்ணீர் விட்டு சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்து தண்ணீர் வற்றியதும் 2 கப் தண்ணீர் 10 நிமிடம் ஊறவைத்த அரிசி, கொத்தமல்லி, புதினா சேர்த்து குக்கரில் 1 விசில் வந்ததும் இறக்கவும். சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி ரெடி!

Tags :
|
|
|