Advertisement

ஆந்திரா ஸ்டைல் பச்சை பயறு தோசை செய்வது எப்படி?

By: Monisha Wed, 09 Dec 2020 3:03:15 PM

ஆந்திரா ஸ்டைல் பச்சை பயறு தோசை செய்வது எப்படி?

சுவையான ஆந்திரா ஸ்டைல் பச்சை பயறு தோசை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பச்சை பயறு - 2 கப்
அரிசி - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

green lentils,dosa,andhra style,flavor,onion ,பச்சை பயறு,தோசை,ஆந்திரா ஸ்டைல்,சுவை,வெங்காயம்

செய்முறை
முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள கெட்டியான மாவில் சிறிதை எடுத்து, கல்லில் போட்டு வட்டமாக கையால் பரப்பி விட்டு, அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி, தோசை கரண்டியால் லேசாக தட்டி, பின் மேலே எண்ணெய்யை ஊற்றி, முன்னும் பின்னும் வேகவைத்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் பச்சை பயறு தோசை தயார்.

Tags :
|
|