Advertisement

சூப்பர் சுவையில் வாழைப்பழ ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க!

By: Monisha Mon, 22 June 2020 4:16:45 PM

சூப்பர் சுவையில் வாழைப்பழ ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு புது விதமாக வாழைப்பழ ஐஸ்கிரீம் செய்து பாருங்கள்.

என்னென்ன தேவை?
பால் – 1/3 கோப்பை
முட்டை – 2
கிரீம் – 1 கோப்பை
சர்க்கரை – 1/2 கோப்பை
பழுத்த வாழைப்பழங்கள் – 1 கோப்பை மசித்தது
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 2 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி

banana ice cream,milk,egg,sugar ,வாழைப்பழ ஐஸ்கிரீம்,பால்,முட்டைசர்க்கரை

எப்படிச் செய்வது?
முதலில் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கருவை பிரித்துக்கொள்ளவும். சூடான தண்ணீரின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முட்டை மஞ்சள்கரு, சர்க்கரை இரண்டையும் சேர்த்து சற்றே கெட்டியாக மஞ்சள் நிறமாகும் வரை அடிக்கவும். அதில் பால், உப்பு, வாழைப்பழ மசியல், எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

இதனை குளிர்ப்படுத்தவும். இதில் முட்டை வெள்ளைக்கரு, வெண்ணிலா எஸ்ஸென்ஸ், மற்றும் கிரீம் சேர்த்து கலக்கவும். இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி குளிர்பதனப்பெட்டியின் உறையும் அறைகளில் வைத்து அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.

Tags :
|
|