Advertisement

பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி ?

By: Karunakaran Thu, 31 Dec 2020 1:43:57 PM

பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி ?

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள் :
பீட்ரூட் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் – ஒன்று
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1

தாளிக்க :
கடுகு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

beetroot,yogurt,pachadi,veg recipe ,பீட்ரூட், தயிர், பச்சடி, வெஜ் ரெசிபி

செய்முறை :

முதலில் பீட்ரூட் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு தாளித்த பின் அதனுடன் வெங்காயம், துருவிய பீட்ரூட்டை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் உப்புச் சேர்த்து வதக்கி வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட வேண்டும். ஆறியதும் அதனுடன் தயிரைச் சேர்த்துக் நன்றாக கலக்க வேண்டும். இப்போது சத்தான சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் தயிர் பச்சடி தயார்.

Tags :
|