Advertisement

செட்டிநாடு கறி வறுவல் செய்வது எப்படி ?

By: Karunakaran Mon, 30 Nov 2020 7:57:16 PM

செட்டிநாடு கறி வறுவல் செய்வது எப்படி ?

செட்டிநாடு கறி வறுவல் என்பது மட்டனில் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான செட்டிநாட்டு அசைவ உணவாகும். சாதம், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

மட்டன் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 20
இஞ்சி - பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகு சீரகத் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:

தேங்காய் - 1 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
முந்திரி - 3

தாளிக்க:

பிரியாணி இலை - 1
பட்டை - சிறிய துண்டு
கல் பாசி - சிறிது
ஏலக்காய் - 1
லவங்கம் - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி


chettinad curry,fried,non veg,mutton ,செட்டிநாடு கறி, வறுவல், அசைவம், மட்டன்

செய்முறை:

முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் மட்டனை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். கழுவிய மட்டனை குக்கரில் போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டு, பின் சிம்மில் 5 நிமிடம் வேக விட வேண்டும். அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்க வேண்டும். பிறகு, மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். பின் வேக வைத்த மட்டனைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விட வேண்டும். தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, பின் மிளகு சீரகத் தூள் சேர்த்து, மசாலா நன்றாகக் கெட்டியாகி வறுவல் பதம் வரும் வரை கிளறி இறக்க சுவையான செட்டிநாடு கறி வறுவல் தயார்.

Tags :
|