Advertisement

செட்டிநாட்டு குழி பணியாரம் செய்வது எப்படி?

By: Monisha Thu, 13 Aug 2020 5:36:22 PM

செட்டிநாட்டு குழி பணியாரம் செய்வது எப்படி?

செட்டிநாட்டில் இருந்து ஆரோக்கியம் நிறைந்த காலை சிற்றுண்டியான குழி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 200 கிராம்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 100 மி.லி
கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா – ஒரு கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 1
கடுகு – ஒரு ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

kuli paniyaram,health,breakfast,carrots,onions ,குழி பணியாரம்,ஆரோக்கியம்,காலை சிற்றுண்டி,கேரட்,வெங்காயம்

செய்முறை
இட்லி அரிசியுடன் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான உப்பு சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து, தேங்காய்ப் பால் விடவும். பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றிப் பொன்னிறமாக இருபுறமும் திருப்பி வேகவிடவும்.

புதினா, தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி என இதற்குத் தொட்டுக்கொள்ள எல்லா வகைச் சட்னியும் அருமையாக இருக்கும்.

Tags :
|