Advertisement

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி செய்யலாம் வாங்க!

By: Monisha Wed, 24 June 2020 1:56:22 PM

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி செய்யலாம் வாங்க!

ஐஸ் வகைகளில் ஒன்றான குல்ஃபியை செய்ய பலருக்கும் தெரியாது. ஆனால் குல்ஃபி ஐஸ் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். எனவே, குல்ஃபியில் ஒன்றான சாக்லேட் குல்ஃபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பால் – 2 கப்
பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் – 1 கப் (துருவியது)
சர்க்கரை – 1/2 கப்
பிஸ்தா, பாதாம் – சிறிது (நறுக்கியது)

chocolate kulfi,kids,ice cream,chocolate,milk ,சாக்லேட் குல்ஃபி,குழந்தைகள்,ஐஸ்கிரீம்,சாக்லேட்,பால்

செய்முறை
முதலில் ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும். 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் குல்ஃபி ரெடி!

Tags :
|