Advertisement

அதீத சுவையில் வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

By: Monisha Fri, 13 Nov 2020 11:26:55 AM

அதீத சுவையில் வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள வெள்ளரிக்காயில் சுவை மிகுந்த கூட்டு எப்படி மிக எளிதாக செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
வெள்ளரிக்காய் 1

அரைக்க
தேங்காய் அரைமூடி
ஜீரகம் அரை டீஸ்பூன்
பூண்டு 4 பல்
பச்சை மிளகாய் 3
கடுகு அரை டீஸ்பூன்

தாளிப்பதற்கு
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
வத்தல் மிளகாய் 3
கறிவேப்பிலை சிறிது

cucumber,garlic,chili,health,taste ,வெள்ளரிக்காய்,பூண்டு,மிளகாய்,ஆரோக்கியம்,சுவை

செய்முறை
முதலில் இந்த வெள்ளரிக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கடுகு இவைகளை நன்றாக மைபோல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெள்ளரிக்காயை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கூடவே கொஞ்சம் உப்பும் சேர்த்து இதை நன்றாக வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு அரைத்து வைத்து இருக்கும் தேங்காய் மசாலாவை இந்த வெள்ளரிக்காயில் போட்டு நன்றாக கிளறி விடுங்கள் இதை அப்படியே ஒரு 5 நிமிடங்கள் வேக விடுங்கள்.

5 நிமிடங்களில் இந்த மசாலா கலவை நன்றாக வெள்ளரிக்காய் உடன் சேர்ந்து வெந்து இருக்கும். இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் 3 வத்தல் மிளகாயை போட்டு கறிவேப்பிலையையும் போட்டு வெள்ளரிக்காயில் அதை தாளித்து விடுங்கள். அதன் பிறகு ஒரு 3 டேபிள்ஸ்பூன் தயிரை எடுத்து அதை இந்த வெள்ளரிக்காய் கூட்டுடன் சேர்த்து விடுங்கள் இதை நன்றாக கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது சுவையான அதிக சத்துள்ள மணமான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.

Tags :
|
|
|