Advertisement

கஸ்டர்டு செய்வது எப்படி?

By: Monisha Fri, 23 Oct 2020 5:39:38 PM

கஸ்டர்டு செய்வது எப்படி?

ரோஜா மற்றும் ஏலக்காய் மணமுள்ள பாலுடன், பொன்னிறமாய் பேக் செய்யப்படும் கஸ்டர்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
800 மி.லி. பால்
250 கிராம் சர்க்கரை
3 முட்டைகள், அடித்து கலக்கியவை
1 தேக்கரண்டி வென்னிலா எசன்ஸ்
1 தேக்கரண்டி பன்னீர்
1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
1/4 தேக்கரண்டி ஜாதிக்காய்
10 பாதாம், துண்டுகளாக நறுக்கியது

custard,vanilla essences,eggs,butter,almonds ,கஸ்டர்டு,வென்னிலா எசன்ஸ்,முட்டைகள்,பன்னீர்,பாதாம்

செய்முறை
பால் மற்றும் சர்க்கரையை பாதி அளவு ஆகும் வரை கொதிக்க விடவும். பிறகு குளிரவிடவும். முட்டைகளை அடித்து, வென்னிலா எசன்ஸ், பன்னீர் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கலக்கவும். இந்த கஸ்டர்டை, பேக்கிங் பாத்திரத்தில் கொட்டி அல்லது தனிப்பட்ட சர்விங் பாத்திரத்தில் கொட்டி, அதன் மேல் ஜாதிக்காய், பாதாம் போன்றவற்றை தூவவும். 180 டிகிரி செல்சியஸில் 40 முதல் 50 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். அல்லது கஸ்டர்டின் மேல்பகுதி பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். இதை நன்றாக குளிர்வித்து, சதுரங்களாக வெட்டி, ஜில்லென்று பரிமாறலாம்.

Tags :
|
|