Advertisement

சுவை மிகுந்த பழம்பொரி செய்வது எப்படி?

By: Monisha Mon, 30 Nov 2020 4:37:36 PM

சுவை மிகுந்த பழம்பொரி செய்வது எப்படி?

மாலை நேரத்தில் சூடான காபி அல்லது டீ சாப்பிட சுவை மிகுந்த பழம்பொரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மைதா - 1/2 கிலோ
நேந்திரம் பழம் - 5
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

maida,banana,sugar,coconut oil,rice flour ,மைதா,வாழைப்பழம்,சர்க்கரை,தேங்காய் எண்ணெய்,அரிசி மாவு

செய்முறை
பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள். மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.

பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்து, கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள். சுவையான பழம்பொரி தயார்.

Tags :
|
|
|