Advertisement

சுவையான முட்டைகோஸ் பொரியல் செய்வது எப்படி?

By: Monisha Mon, 26 Oct 2020 09:27:23 AM

சுவையான முட்டைகோஸ் பொரியல் செய்வது எப்படி?

மிகவும் சுவையாக வீட்டிலேயே முட்டைகோஸ் பொரியல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரைக்க வேண்டிய பொருட்கள்
தேங்காய் 50 கிராம்
பச்சை மிளகாய் 4
பூண்டு 2 பல்
ஜீரகம் 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் 1/2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை சிறிது

வதக்க வேண்டிய பொருட்கள்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

cabbage,garlic,onion,curry leaves ,முட்டைகோஸ்,பூண்டு,வெங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை
முதலில் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி சூடாகியதும் கடுகை போட்டு கடுகு பொட்டியவுடன் கறிவேப்பிலை பச்சைமிளகாய் போட்டு வதக்கி கூடவே வெங்காயம் போட்டு நன்கு வதங்கியவுடன் முட்டைகோஸை போட்டு நன்றாக கிளறி விடுங்கள். தேவையான அளவு உப்பு சேருங்கள். முட்டைகோஸ் சிறிது வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது கலவையை கொட்டி நன்கு கிளறி விடுங்கள். முட்டைகோஸ் பொன்னிறமாக வதங்கும் வரை நன்றாக கிளறி விட்டு கொண்டே இருங்கள். நன்கு பொன்னிறமாக மாறியதும் கீழே இறக்கி இதை சாதத்துடன் பரிமாறலாம் . மிகவும் சுவையாக இருக்கும்.

Tags :
|
|