Advertisement

சுவையான கேரட், வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?

By: Monisha Thu, 05 Nov 2020 1:20:33 PM

சுவையான கேரட், வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?

தோசை அல்லது இட்லிக்கு மேலும் அதிக சுவை தரும் சத்தான சுவையான கேரட், வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வேர்க்கடலை – 1/4 கப்
கேரட் – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.

carrots,peanuts,chutney,chillies,toast ,கேரட்,வேர்க்கடலை,சட்னி,மிளகாய்,தோசை

செய்முறை
முதலாவது வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். அதன்பின் இந்த எண்ணெயில் கேரட்டை நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும். அதன்பின்பு மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.

இந்த கலவையுடன் பெருங்காயத்தூள், வதக்கிய கேரட், உப்பு சேர்த்து கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும். அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து எடுத்துக் கொள்ளுங்கள் சுவையான சட்னி ரெடி!

Tags :