Advertisement

சுவையான மொறு மொறு வெங்காய சமோசா செய்வது எப்படி?

By: Monisha Thu, 26 Nov 2020 3:44:04 PM

சுவையான மொறு மொறு வெங்காய சமோசா செய்வது எப்படி?

மழை காலத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான வெங்காய சமோசாவை எளிதாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மைதா - 3 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
வெங்காயம் - 2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
தனியாத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 கப்

onions,samosas,flavors,ingredients,recipe ,வெங்காயம்,சமோசா,சுவை,பொருட்கள்,செய்முறை

செய்முறை
முதலில் ஒரு பௌலில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்து, தீயை குறைத்து வைத்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இறக்க வேண்டும்.

பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து, இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, சமோசா வடிவில் செய்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான வெங்காய சமோசா தயார்.

Tags :
|