Advertisement

சுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி?

By: Monisha Tue, 13 Oct 2020 4:44:59 PM

சுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி?

பாசிப்பருப்பு வைத்து எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் சுவையான பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு & 100 கிராம்
மண்டை வெல்லம் & 200 கிராம்
தேங்காய் & அரை முறி (மீடியம் சைஸ்)
கிஸ்மிஸ் & 10 எண்ணம்
முந்திரிப் பருப்பு & 10 எண்ணம்
ஏலக்காய் & 3 எண்ணம்
நெய் & 2 தேக்கரண்டி

payasam,jaggery,coconut,ghee,dry fruits ,பாசிப்பருப்பு பாயசம்,வெல்லம்,தேங்காய்,நெய்,கிஸ்மிஸ்

செய்முறை
முதலில் பாசிப்பருப்பை கடாயில் போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும். மண்டை வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பின் வறுத்த பாசிப் பருப்பினை குக்கரில் போட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும். ஒரு விசில் வந்ததும் தணலை சிம்மில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். பின் குக்கரைத் திறந்து பருப்பை நன்கு மத்தால் கடைந்து விடவும். தூளாக்கி வைத்துள்ள மண்டை வெல்லத்தை பருப்பினைப் போல் மூன்று மடங்கு தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பினைப் போட்டு அத்துடன் வடிகட்டிய சர்க்கரைக் கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.

வாணலியில் நெய்யினை ஊற்றி முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் வறுக்கவும். அதைப் பாயாசக் கலவையில் கொட்டவும்.ஏலக்காயை சேர்க்கவும். அனைத்தையும் ஒரு சேரக் கிளறி இறக்கவும். சுவையான பருப்பு பாயாசம் தயார்.

Tags :
|