Advertisement

சுவையான பரங்கிக்காய் கூட்டு செய்வது எப்படி?

By: Monisha Tue, 20 Oct 2020 6:41:50 PM

சுவையான பரங்கிக்காய் கூட்டு செய்வது எப்படி?

பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பரங்கிக்காயில் சுவையான கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
பரங்கிக்காய் - ஒரு துண்டு
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
துவரம் பருப்பு - கால் கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
வெங்காயம் மற்றும் பரங்கிக்காயை நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை ஊற வைக்கவும். குக்கரில் பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு சேர்த்து நீர் விட்டு வேக விடவும். ஊற வைத்த பருப்பை இஞ்சி, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும். பாதி வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை வேக வைத்த பருப்பில் சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான பரங்கிக்காய் கூட்டு தயார்.


Tags :
|
|
|