Advertisement

ஐந்து நிமிடத்தில் சுவையான சேமியா பாயசம் செய்வது எப்படி?

By: Monisha Fri, 18 Sept 2020 3:18:51 PM

ஐந்து நிமிடத்தில் சுவையான சேமியா பாயசம் செய்வது எப்படி?

தெவிட்டாமல் இனித்துக் கொண்டே இருக்கும் சுவையான சேமியா பாயசம் ஐந்து நிமிடத்தில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை
8 மேசைக்கரண்டி தண்ணீர்
200 கி. சேமியா, நெய்யில் லேசாக வறுத்தது
240 மி.லி. பால்
1 தேக்கரண்டி குங்குமப்பூ, பாலில் கரைத்தது
1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
6 மேசைக்கரண்டி சர்க்கரை
40 கி. முந்திரி, நெய்யில் வறுத்தது
1 தேக்கரண்டி காய்ந்த திராட்சை, நெய்யில் வறுத்தது
4 தேக்கரண்டி தரமான நெய்

semiya payasam,ghee,milk,raisins,saffron ,சேமியா பாயசம்,நெய்,பால்,காய்ந்த திராட்சை,குங்குமப்பூ

செய்முறை
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் வறுத்த சேமியாவை சேர்க்கவும். சேமியா பாதி வேகும் வரை விட்டு, பிறகு அத்துடன் பால் சேர்க்கவும். தொடர்ந்து கலக்கிவிடவும். மீதமுள்ளப் பொருள்களை அத்துடன் சேர்த்து, நன்றாக கலக்கி, சூடாக பரிமாறவும்.

Tags :
|
|