Advertisement

அனைவரையும் சாப்பிட தூண்டும் முட்டை வறுவல்

By: Monisha Mon, 26 Oct 2020 08:44:01 AM

அனைவரையும் சாப்பிட தூண்டும் முட்டை வறுவல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சாப்பிட தூண்டும் முட்டை வறுவல் எப்படி எளிதாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை 5,
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த வத்தல் மிளகாய் 2,
பச்சை மிளகாய் 4,
கறிவேப்பிலை தேவைக்கு,
தக்காளி 1,
வெங்காயம் 2,
உப்பு தேவைக்கு.

eggs,onions,tomatoes,green chillies ,முட்டை,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்

செய்முறை
முதலில் பச்சை மிளகாயை சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். கூடவே காய்ந்த வத்தல் மிளகாயை சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அது போல வெங்காயத்தையும் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை அரைத்து நன்றாக பேஸ்ட்போல் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போட்டு கடுகு வெடித்ததும், கறிவேப்பிலையை போட்டு, கூடவே வெட்டி வைத்திருக்கும் பச்சைமிளகாய், காய்ந்த வத்தல் மிளகாய் போட்டு லேசாகக் கிளறிவிடுங்கள்.

அதன் பிறகு வெங்காயத்தைப் போட்டு நன்றாக ஒரு இரண்டு நிமிடங்கள் கிளற வேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட் சேர்க்க வேண்டும். இதை ஒரு ஒரு நிமிடம் நன்றாக கிளறி விடவேண்டும்.

இந்த நேரத்தில் தேவைக்கு சிறிது உப்பை சேர்க்கவேண்டும். அதன் பிறகு முட்டையை ஒரு பாத்திரத்தில் விட்டு நன்றாக அடித்து அதை இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்படி ஒரு மூன்று நிமிடங்கள் நன்றாகக் கிளற வேண்டும்.

பெரிய துண்டுகளாக இருப்பதை லேசாக சுரண்டிக்கொண்டு தட்டிவிட முட்டை ஒரே போல நன்றாக வேகும். இதனால் நல்ல டேஸ்டாக இருக்கும். நல்ல சுவையான முட்டை வறுவல் ரெடி.

Tags :
|
|