Advertisement

ஹோமேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி?

By: Monisha Thu, 03 Dec 2020 09:50:20 AM

ஹோமேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி?

ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று பலவிதமான ஊட்டச்சத்து பவுடர்களை பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் இதுபோன்ற ஊட்டச்சத்து பொருட்களில் பலவிதமான கலப்படங்கள் இருப்பதை சமீபகாலமாக பார்த்து வருகின்றோம். எனவே, நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ஹார்லிக்ஸ் ஊட்டச்சத்து பவுடர் தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். இதனை குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம் குழந்தைகள் மட்டுமின்றி பெண்களுக்கும் பெரியோர்களும் இதனை சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்
கோதுமை – ஒரு கப் (அ) 1/4 கிலோ
பாதாம் பருப்பு – 50 கிராம்
நிலகடலை – 50 கிராம்
சர்க்கரை – 1 கப்
பால் பவுடர் – 1 கப்

horlicks,wheat,almonds,sugar,milk powder ,ஹார்லிக்ஸ்,கோதுமை,பாதாம் பருப்பு,சர்க்கரை,பால் பவுடர்

செய்முறை
கோதுமையை ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் ஊறவைத்த கோதுமையை வடிக்கட்டி ஒரு வெள்ளை துணியில் கட்டி 3 நாட்கள் வைத்தால் முளைக்கட்டும், பின் முளைக்கட்டிய கோதுமையை எடுத்து பொன்னிறமாக வறுத்து ஆறவைக்கவும்.

பின்பு, பாதம் பருப்பு மற்றும் நிலக்கடலை இரண்டையும் லேசாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த கோதுமையை நன்கு பொடியாக்கி அதை சலித்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு வறுத்த நிலக்கடலை மற்றும் பாதாமை பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.

சலித்த கோதுமை மாவு மற்றும் நிலக்கடலை பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கலந்த மாவுடன் பால் பவுடர், பொடியாக அரைத்த சர்க்கரை என்று ஒன்றன் பின் ஒன்றாக நன்கு கலந்தால் ஹோமேட் ஹார்லிக்ஸ் ரெடி.

Tags :
|
|