Advertisement

கொள்ளு துவையல் செய்வது எப்படி?

By: Monisha Fri, 20 Nov 2020 3:22:28 PM

கொள்ளு துவையல் செய்வது எப்படி?

கொழுப்பைக் கரைப்பதில் முதலிடம் வகிக்கும் கொள்ளு துவையல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்
கொள்ளு 1/4 கப்
துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
வர மிளகாய் 2
மிளகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
தேங்காய் -2 மேஜைக்கரண்டி
பூண்டு- 2 பல்
உப்பு -1/2 தேக்கரண்டி, புளி

beans,lentils,garlic,pepper,coconut ,கொள்ளு,பருப்பு,பூண்டு,மிளகு,தேங்காய்

செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு கொள்ளு வறுத்துக்கொள்ளவும். நிறம்மாறும் வரை வறுத்து,எடுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, துவரம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் போது, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும்.

இந்த கலவையை வறுத்து வைத்துள்ள கொள்ளு பருப்புடன் சேர்த்து அரைத்து எடுக்கவும், சுவையான மனமும், நற்குணமும் நிறைந்த கொள்ளு துவையல் தயார். இது சூடான சாதம், தோசை அனைத்திற்கும் ஏற்றது.

Tags :
|
|
|