Advertisement

பாரம்பரியமிக்க வெண்டைக்காய் கிரேவி செய்யலாம் வாங்க..!

By: Monisha Tue, 09 June 2020 1:56:48 PM

பாரம்பரியமிக்க வெண்டைக்காய் கிரேவி செய்யலாம் வாங்க..!

வெண்டைக்காயில் அதிகளவில் சத்துக்கள் உள்ளன. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்சத்துகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. இத்தகைய சத்து நிறைந்த வெண்டைக்காயை வைத்து பாரம்பரியமிக்க கிரேவி எப்படி செய்வதென்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 100 கிராம், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 50 கிராம், பச்சை மிளகாய் - 4, இஞ்சி-பூண்டு பேஸ்ட்- ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 2, மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித் தூள் - அரை டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கெட்டித் தயிர் - 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு.

ladies finger gravy,onions,tomatoes,spices,recipe , வெண்டைக்காய் கிரேவி,சமையல்குறிப்பு,வெங்காயம்,தக்காளி,மசாலா

எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சிறிதாக நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதே பாத்திரத்தில் கடுகு, சீரகம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். அதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட், தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும்.

அதில் மிளகாய் பொடி, மல்லிப் பொடி, கரம் மசலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையுடன் வதக்கிய வெண்டைக்காய், தயிர் இரண்டையும் சேர்க்க வேண்டும். இத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் மூடிவைத்து வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் கிளறிவிட்டு, கொத்தமல்லித் தழையைச் சேர்த்து இறக்க வேண்டும்.

Tags :
|
|